தேசிய விருது பட வாய்ப்பை சாய்பல்லவி தவற விட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை சாய்பல்லவி தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுன் ‘எஸ்.கே.21’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இவர் மலையாளத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு நடிகர் பஹத் பாசிலுடன் இணைந்து, ‘மகிஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது.
ஆனால், அந்த சமயத்தில் அவர் தனது மருத்துவ படிப்பை முடிப்பதற்காக வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால் அந்த வாய்ப்பை ஏற்க முடியாமல் போனது. அவருக்குப் பதிலாகதான் அந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி நடித்தார். மேலும், அந்தப் படத்தில் நடித்ததற்காக அபர்ணாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பிறகு அவர் நடித்த ‘சூரரைப் போற்று’ படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது.
அபர்ணாவை ‘மகிஷிண்டே பிரதிகாரம்’ படத்திற்குள் கொண்டு வந்த இந்த சம்பவத்தைத் தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ள படத்தின் தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா, அபர்ணா போன்ற திறமையான நடிகையை தங்களது படத்தில் அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!
ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!
அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!
ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்