லியோ பட டிரெய்லருக்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்; அப்செட்டில் ரசிகர்கள்

By காமதேனு

’லியோ’ பட டிரெய்லர் கொண்டாட்டத்திற்கு கடைசி நேரத்தில் சிக்கல் வந்துள்ளதால் ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘லியோ’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாக இருக்கிறது. சமீபத்தில் ‘லியோ’ படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கும் நிலையில், இன்று படக்குழு ‘லியோ’வில் இருந்து த்ரிஷாவின் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வழக்கமாக, விஜய் படத்தின் டிரெய்லர் இதுபோன்று வெளியாகும் போது, சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் உள்ள பார்க்கிங் ஏரியாவில் பிரம்மாண்ட திரைகட்டி அதில் திரையிடப்படும். இதற்கான அனுமதி காவல்துறையினரிடம் வாங்கிய பின்புதான் திரையிடுவார்கள். அந்த வகையில் ’லியோ’ படத்தின் டிரெய்லரை திரையிட அனுமதி கோரிய போது அதற்கு கோயம்பேடு போலீசார் அனுமதி தர மறுத்துள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பொதுவெளியில் ‘லியோ’ டிரெய்லரை திரையிட அனுமதி மறுத்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

மனைவியின் டார்ச்சர்… விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்!

HBD சோ : எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ரஜினி... இறுதி வரை ‘கெத்து’ காட்டிய ஆளுமை!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

அதிர்ச்சி… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை!

அதிகாலையில் அதிர்ச்சி... போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE