இன்று நாக சைதன்யா- ஷோபிதா நிச்சயதார்த்தம்?! தீயாய் பரவும் செய்தி!

By KU BUREAU

நடிகர்கள் நாக சைதன்யா- ஷோபிதா துலிபலா இருவருக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி தெலுங்கு திரையுல ரசிகர்களிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நடிகை சமந்தாவுடனான விவாகரத்துக்குப் பின்னர் நடிகர் நாக சைதன்யா, ஷோபிதா துலிபலாவுடன் டேட்டிங் செய்திகளில் அடிக்கடி அடிபடத் தொடங்கினார். ஷோபிதாவுடன் அவர் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. ஆனால், இந்த செய்திகளை இருவரும் உறுதி செய்யவும் இல்லை மறுக்கவும் இல்லை. இந்த நிலையில், நாக சைதன்யாவுக்கும் ஷோபிதாவுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள நாக சைதன்யாவின் இல்லத்தில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும், இதில் இருவீட்டைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. நிச்சயம் முடிந்ததும் இதுதொடர்பான செய்தியையும் புகைப்படங்களையும் நாகர்ஜூனா வெளியிடுவார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE