பிரபல நடிகை தன் கணவருடன் கார் விபத்தில் சிக்கியுள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஷாருக்கானுடன் பாலிவுட்டில் ‘ஸ்வதேஷ்’ படத்தில் நடித்தவர் நடிகை காயத்ரி ஜோஷி. இவர் தனது கணவர் விகாஸ் ஓபராயுடன் இத்தாலியில் வசித்து வருகிறார். இத்தாலியில் நடந்த ஒரு சூப்பர் கார் டூரில் இருவரும் காரில் பயணத்த போது எதிர்பாராத விதமாக, இந்த விபத்து நடந்துள்ளது. பல கார்கள் மோதிக் கொண்ட இந்த விபத்தில் ஃபெராரி காரில் பயணித்த ஒரு தம்பதி அங்கு சென்ற லம்போஹினி காரை வேகமாக முந்த முயற்சித்த போது, அருகில் பயணித்த வேனில் மோதி விபத்து நடந்துள்ளது.
அந்த ஃபெராரி கார் தீப்பிடித்து அதில் பயணித்த தம்பதியும் விபத்தில் இறந்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த மார்க்கஸ் க்ராடலி (67), மெலிஸா க்ராடலி (63) ஆகியோர் அந்த தம்பதி என கண்டறியப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு பிறகு நடிகை காயத்ரி, கடவுளின் அருளால் சிறிய காயங்களுடன் தப்பித்து தானும் தன் கணவரும் தற்போது நலமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
இன்று கோலாகலமாக தொடங்குகிறது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா!
கார் ஓட்டக் கற்றுக்கொடுத்த மகன்; கிணற்றில் பாய்ந்து தந்தை உயிரிழப்பு!
செல்போன் விளையாட்டால் விபரீதம்; மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன்
பெரும் சோகம்... மாயமான 23 ராணுவ வீரர்கள்! தேடுதல் வேட்டை தீவிரம்!