ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்று புது சொகுசு கார் வாங்கிய நடிகர் விஜய்!

By KU BUREAU

நடிகர் விஜய் தனக்குச் சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றுவிட்டு வேறு புது சொகுசுக்காரை வாங்கி இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தனக்குச் சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் காரை சமீபத்தில் விற்றுவிட்டார் எனத் தகவல் வெளியானது. பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் காருக்கு, இந்தியாவில் நுழைவு வரி செலுத்தாமல் விஜய் வரி ஏய்ப்பு செய்துவிட்டார் என கடந்த சில வருடங்களுக்கு முன்பு சர்ச்சை கிளம்பியது. ஆனால், இதனை ரத்து செய்யக் கோரி விஜய் நீதிமன்றத்தை நாட நீதிபதி ரத்து செய்ய மறுத்தார்.

இப்படி பல சர்ச்சைகளை சந்தித்த ரோல்ஸ் ராய்ஸ் காரை விஜய் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார் என்ற செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரல் ஆனது. இந்நிலையில், கார் பிரியரான விஜய் இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றுவிட்டு இப்போது புதிய சொகுசுக்கார் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள லெக்சஸ் வகை கார் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE