’GOAT' பட புரோமோஷனுக்காக கட்சி பெயரைப் பயன்படுத்தக்கூடாது: விஜய் அதிரடி

By KU BUREAU

’GOAT' பட புரோமோஷனுக்காக தனது கட்சிப் பெயரை பயன்படுத்தக் கூடாது என நடிகர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ’GOAT' படத்தை முடித்துள்ளார். இந்தப் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருப்பதால் படத்திற்கான புரோமோஷனை படக்குழு தொடங்கியுள்ளது. யுவன் இசையில் இதுவரை படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. எப்போது இசை வெளியீட்டு விழா என்று வெங்கட்பிரபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘விஜய் ரெடி என்றால் நாங்களும் ரெடி!’ என்று சொல்லியிருந்தார்.

இந்தப் படத்தின் புரோமோஷனுக்காக பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், படம் வெற்றி பெற வாழ்த்துவதாக தவெக கட்சி பெயரைக் குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் சிலர் போஸ்டர் அடித்துள்ளனர். இதுதான் தற்போது சிக்கலை கொண்டு வந்திருக்கிறது.

சினிமா வேறு அரசியல் வேறு என்பதில் தெளிவாக உள்ள விஜய், பட புரோமோஷனுக்காக கட்சிப் பெயரை பயன்படுத்தக் கூடாது என தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். இதனால், படத்தின் புரமோஷனுக்காக ஆட்டோக்களில் ஒட்ட புதிதாய் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர்களில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு பெயர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE