மீண்டும் ஹாலிவுட்டில் என்ட்ரி: மாஸ் காட்டும் தனுஷ்

By KU BUREAU

சென்னை: நடிகர் தனுஷ் மீண்டும் ஹாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ‘ராயன்’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால், உற்சாகமடைந்துள்ளார் தனுஷ். அடுத்து இவர் நடிப்பில் ‘குபேரா’ திரைப்படமும், இவர் மூன்றாவதாக இயக்கி இருக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ என்ற படமும் வெளியாக இருக்கிறது. இதோடு தனுஷின் ஆதர்ச நாயகனான இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக்கும் இவரது கைவசம் இருக்கிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளியான ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்ததன் மூலம் தனுஷ் ஹாலிவுட்டில் நடிகராக அறிமுகமானார். இதனை அடுத்து அவரது இரண்டாவது ஹாலிவுட் படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. ரூஸோ பிரதர்ஸ் சமீபத்தில் ‘அவென்ஞ்சர்ஸ் டூம்ஸ் டே’ படத்தை அறிவித்தனர். இந்தப் படத்தில்தான் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் ரூஸோ பிரதர்ஸூடன் தனுஷ் இணைந்திருப்பது அவரது ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. இதுகுறித்தான, அதிகாரப்பூர்வ அப்டேட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE