நடிகை உமா ரியாஸ் மகனுக்குத் திருமணம்: கோலாகலமாக நடந்த மெஹந்தி ஃபங்ஷன்!

By KU BUREAU

சென்னை: நடிகர் ஷாரிக் ஹாசனுடைய மெஹந்தி ஃபங்கஷன் இன்று தடபுடலாக நடந்துள்ளது.

நடிகர்கள் உமா ரியாஸ்-ரியாஸ் கான் ஜோடியின் மகன் ஷாரிக் ஹாசன். இவர் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். தனது பெற்றோரைப் போலவே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர் ‘ஜிகிரி தோஸ்து’, ‘டான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் மரியா ஜெனிஃபர் என்பவரைக் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்குத் திருமணம் வரும் ஆகஸ்ட் எட்டாம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது.

திருமணத்திற்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், இன்று உறவினர்கள் நண்பர்களுடன் மெஹந்தி ஃபங்ஷன் நடந்திருக்கிறது. மஞ்சள் நிற உடையில் ஷாரிக் மற்றும் மரியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் புகைப்படத்தை உமா ரியாஸ் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்து, ’என்னுடைய பேபி அவன் ஏஞ்சலை கண்டுபிடித்து விட்டான். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்’ எனக் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE