”இதோட நிப்பாட்டிக்க...” சீமானை எச்சரித்த விஜயலட்சுமி!

By KU BUREAU

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை எச்சரித்து விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சீமான் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி ஏமாற்றி விட்டார் என்று நடிகை விஜயலட்சுமி அடிக்கடி வீடியோ வெளியிடுவதும் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. நாம் தமிழர் கட்சி நிர்வாகி தன்னை மிரட்டுவதாகச் சொல்லி கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தவர் பின்பு, சீமானைத் தன்னால் எதிர்க்க முடியவில்லை என்று சொல்லி புகாரைத் திரும்ப பெற்றுவிட்டு பெங்களூரு கிளம்பி சென்றார்.

இந்த நிலையில், பெங்களூருக்காரியைத் தனக்கு எதிராகத் திருப்பி விட்டது திமுகதான் என சீமான் பேசியது இணையத்தில் வைரலானது. இந்தப் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை விஜயலட்சுமி தற்போது புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு சீமானை எச்சரித்து பேசியிருக்கிறார்.

அந்த வீடியோவில், “என்னையும் திமுகவையும் இணைத்து பேச காரணம் என்ன? திமுக, கலைஞர் மற்றும் என்னை தவறாக பேசுவதை விட அரசியலில் வேறு எதுவும் உங்களுக்கு தெரியாதா? என்னை பற்றி பேசாதே என சொல்லியும் நீ என்னை பற்றி ஏன் பேச வேண்டும்? நான் அமைதியாக பெங்களூரில் இருக்கேன். என்னையும் திமுக-வையும் தொடர்ந்து தவறாகப் பேசினா. வர இருக்கும் 2026-ல் பிச்சை எடுக்க வேண்டும். இதோட நிப்பாட்டிக்கோ! இதற்கு மேல் என்னைப் பற்றித் தவறாக பேசினால் என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்” என ஆவேசமாகவும் தகாத வார்த்தைகளில் திட்டியும் பேசியிருக்கிறார் விஜயலட்சுமி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE