நடிகர் விஜயின் கடைசிப்படமாக அறிவிக்கப்பட்ட ‘தளபதி 69’ படத்தில் மலையாள சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ இணைந்துள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘தளபதி 69’ படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் விஜய் முழு கவனம் செலுத்த இருப்பதால், அவரது 69வது படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
’தளபதி 69’ படம் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
விஜய் படங்கள் என்றாலே அதில் குழந்தைகள் அல்லது தங்கை செண்டிமெண்ட் நிச்சயம் இடம்பெறும். அந்த வகையில், ‘தளபதி 69’ படத்தில் அரசியல் களத்தோடு தங்கை செண்டிமெண்ட்டுக்கும் டிக் அடித்திருக்கிறார் விஜய். இதில் விஜய்க்கு தங்கையாக மலையாளத்தில் ஹிட்டான ‘பிரேமலு’ படத்தின் சென்சேஷனல் நாயகி மமிதா பைஜூ நடிக்கிறாராம். இந்த வருடம் நவம்பர் மாதம் தொடங்க இருக்கும் படம் குறித்தும், நடிகர், நடிகைகள் குறித்துமான அப்டேட் சீக்கிரம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
» ரசிகர்கள் அதிருப்தி: 'GOAT' படத்தில் வெங்கட்பிரபு செய்யும் மாற்றம்?!
» ’மஞ்சுமெல் பாய்ஸ்’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: இழப்பீடு பெற்றார் இளையராஜா!