‘இந்தியன்2’ படத்திற்கான டப்பிங்கை கமல்ஹாசன் முடித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘இந்தியன்2’. ‘இந்தியன்2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்ஸ்’ இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வரக்கூடிய ஷங்கர், சமீபத்தில் ராம் சரணுடன் ‘கேம் சேஞ்சர்ஸ்’ படத்தை முடித்தின் க்ளைமாக்ஸ் முடித்தார். ‘இந்தியன்2’ படத்திற்கான இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது தொடங்கி இருக்கும் நிலையில், இந்தப் படத்தில் தனக்கான போர்ஷனுக்கான டப்பிங்கை கமல்ஹாசன் முடித்துள்ளார். இதனால், விரைவில் படத்தின் டீசர் க்ளிம்ப்ஸ் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்தப் புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை, தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் ’இந்தியன்2’ படப்பிடிப்பு நடந்துள்ளது. ‘இந்தியன்2’ படத்தை முடித்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் அடுத்து அ.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.