ரசிகர்கள் அதிருப்தி: 'GOAT' படத்தில் வெங்கட்பிரபு செய்யும் மாற்றம்?!

By KU BUREAU

'GOAT' படத்திற்கு தொடரும் நெகட்டிவ் விமர்சனங்களால் வெங்கட்பிரபு முக்கியமான மாற்றம் ஒன்றைப் படத்தில் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விஜயின் 69வது படமாக உருவாகி வரும் 'GOAT' படத்தில், விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மகன் விஜயை இளைமையாகக் காட்ட அமெரிக்காவில் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறார் வெங்கட்பிரபு. ஆனால், இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘ஸ்பார்ட்’ மூன்றாவது சிங்கிள் வரை விஜயின் இளமையான டீ-ஏஜிங் தோற்றம் ரசிகர்களிடையே நெகட்டிவ் விமர்சனங்களையே சந்தித்து வருகிறது.

அரசியல் எண்ட்ரிக்கு முன்பு விஜயின் கடைசிப் படங்களில் இதுவும் ஒன்றாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், பாடல்களில் யுவன் இசையும் பெரிதாக கவரும்படி இல்லை என்று சொல்லி இணையத்தில் ‘GO BACK YUVAN' என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். இதை எல்லாம் கருத்தில் கொண்டு விஜயின் டீ-ஏஜிங் தோற்றத்தை சரிசெய்யும் பணியில் இறங்கி இருக்கிறாராம் இயக்குநர் வெங்கட்பிரபு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE