‘குட் பேட் அக்லி’ புது போஸ்டர்... செம மாஸ் லுக்கில் நடிகர் அஜித்!

By KU BUREAU

சென்னை: நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் புது போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

தமிழ்த் திரையுலகில் நடிகர் அஜித் கதாநாயகனாக அறிமுகமாகி 32 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவர் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்களில் இருந்து புது போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. காலையில் இரத்தம் தெறிக்கும் போஸ்டருடன் ‘விடாமுயற்சி’ போஸ்டர் வெளியாகி இருந்தது. மாலை ‘குட் பேட் அக்லி’ படத்தின் போஸ்டரில் செம மாஸாக ஸ்டைலிஷான ரக்ட் லுக்கில் இருக்கிறார் அஜித்.

இந்தப் போஸ்டரில், ‘கடந்த 32 ஆண்டுகளாக தைரியம், ஒழுக்கம், பயணம் என ’குட் பேட் அக்லி’ எனப் பலவற்றையும் பார்த்து வெற்றிகரமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் அஜித்திற்கு வாழ்த்துகள்!’ என்ற கேப்ஷனும் அந்த போஸ்டரில் இடம் பிடித்திருக்கிறது. ஒரே நாளில் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ என இரண்டு படங்களின் அப்டேட்டால் அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE