'இந்தியன்2’ ஓடிடியில் வெளியாவதில் சிக்கல்?

By KU BUREAU

'இந்தியன்2’ திரைப்படம் ஓடிடியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த் உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘இந்தியன்2’. இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் தோல்வியடைந்தது. படம் வெளியாவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட ரூ.120 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ஆனால், படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாமல் ரூ.150 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் வசூலுக்கே தடுமாறி கொண்டிருக்கும் நிலையில், ’இந்தியன்2’ படத்தை இவ்வளவு பெரிய தொகைக்கு விலைக்கு வாங்க தயக்கம் காட்டியிருக்கிறது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்.

இதற்கு முன்பு தமிழ்நாட்டில் சக்கை போடு போட்ட ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தையே அதிக தொகைக்கு வாங்க முன்வராமல் கறார் காட்டியிருக்கிறது நெட்ஃபிலிக்ஸ். அப்படியிருக்க, ‘இந்தியன்2’ படத்தினை பெரும் தொகைக்கு வாங்க ரொம்பவே யோசித்து தொகையை குறைக்க சொல்லி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இதனால், ‘இந்தியன்2’ திரைப்படம் வரும் வாரத்தில் ஓடிடியில் வெளியாகுமா அல்லது தள்ளிப் போகுமா என்பதில் சிக்கலும் குழப்பமும் நீடிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE