கேன்ஸ் போட்டி பிரிவில் ‘தக்ஸ்’ ஹீரோ படம்

சென்னை: நடன இயக்குநர் பிருந்தா இயக்கிய ‘தக்ஸ்’ படத்தில் நாயகனாக நடித்தவர் ஹிருது ஹாரூன். இவர்,விஜய் சேதுபதி நடித்த ‘மும்பைக்கார்’ என்ற இந்திப் படத்திலும், அமேசானில் வெளியான ‘க்ராஷ் கோர்ஸிலிம்’ என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

இவர் பாயல் கபாடியா இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ (all we imagine as light) .இதில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் ஆகியோரும் நடித்துள்ளனர். இது, 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் வரும் 23-ம்தேதி திரையிடப்பட இருக்கிறது. அங்கு‘பால்ம் டி' ஓர்’ விருதுக்கும் போட்டி யிடுகிறது.

30 வருடத்துக்குப் பிறகு, இப்படவிழாவின் அதிகாரப்பூர்வ போட்டிப்பிரிவுக்குச் செல்லும் இந்திய படம் இது. முன்னதாக, ஷாஜிஎன்.காருண் இயக்கிய ‘பிறவி’ என்ற மலையாளப் படம்இந்தப் பிரிவில் அதிகாரப்பூர்வமாகக் கலந்துகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

21 mins ago

ஸ்பெஷல்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஸ்பெஷல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

ஸ்பெஷல்

3 hours ago

ஸ்பெஷல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்