பிரசாந்தின் ‘அந்தகன்’ ரிலீஸ் தேதி மாற்றம்

By KU BUREAU

இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘அந்தாதுன்’ படம் தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. நடிகர் தியாகராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார்.

சிம்ரன்,கார்த்திக், பிரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் ஆக.15-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அன்று, விக்ரமின் ‘தங்கலான்’, ‘ரகு தாத்தா’, ‘டிமான்டி காலனி 2’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதால் இதன் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளனர். ஆக. 9-ல் இந்தப் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE