செம்பருத்தி டீ உடலுக்கு நல்லதா? - சர்ச்சையானது நயன்தாரா பதிவு

By KU BUREAU

நயன்தாராவை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனர். சமந்தாவைவிட அவருக்கு அதிக பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் “செம்பருத்தி டீ குடிப்பது நல்லது, அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் (antioxidants) அதிகம் உள்ளதால், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினை மற்றும் முகப்பரு, தோல் நோய்களுக்கு சிறந்தது’’ என்று கூறியிருந்தார்.

இதை தனக்கு பரிந்துரை செய்தவரை டேக் செய்து, ரெசிபி வேண்டுமானால் அவரிடம் கேட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தார். இந்தப் பதிவைக் கண்ட பிரபல மருத்துவர் பிலிப்ஸ் என்பவர், எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது பாலோயர்களை நயன்தாரா தவறாக வழிநடத்துவதாகக் கூறியுள்ளார். அவர் குறிப்பிடும் எதுவும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்று நீண்ட பதிவில் தெரிவித்துள்ள அவர், நயன்தாராவின் இந்தப் பதிவு தனது ஊட்டச்சத்து நிபுணருக்கான விளம்பரம் போல் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து நயன்தாராவுக்கு எதிராகவும் பிரபலங்கள் இவ்வாறு பதிவு செய்வது கவலை அளிப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்தனர். இதனால் நயன்தாரா அந்தப் பதிவை திடீரென நீக்கியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் சமந்தா, வைரஸ் பாதிப்புகளுக்கு ஹைட்ரஜன் பெராக்ஸைட் நெபுலைசேஷன் சிகிச்சையை மேற்கொள்வதாகக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைக் கண்டித்ததும் இந்த மருத்துவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE