அறிவழகன் இயக்கத்தில் 'சப்தம்': ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் லட்சுமி மேனன்

By காமதேனு

ஆதி நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் 'சப்தம்' படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

'சப்தம்' படத்தில் லட்சுமி மேனன்.

தமிழ் திரையுலகில் 'ஈரம்' என்ற முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். திரில்லர் படத்தை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படமாக்கிய அறிவழகன், தயாரிப்பாளராக 'சப்தம்' படத்தின் மூலம் மாறியுள்ளார்.

ஆல்பா பிரேம்ஸ் இயக்குநர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆதி நடிக்கிறார். இப்படத்தின் படிப்பிடிப்பு கடந்த ஆண்டு டிச.14-ம் தேதி தொடங்கியது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் கதாநாயகியாக லட்சுமிமேனன் இணைந்துள்ளார்.

ஹாரர் திரில்லராக உருவாகும் 'சப்தம்' திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் படமாக்க உள்ளது. இதில் ஆதி, லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இப்படத்தில் லட்சுமி மேனன் இணைந்தது குறித்த அறிவிப்பை, ஒரு போஸ்டராக தயாரிப்பு குழுவினர் பகிர்ந்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE