சாவர்கர் குறித்த கருத்துக்கு சுதா கொங்கரா வருத்தம்

By KU BUREAU

இயக்குநர் சுதா கொங்கரா சமீபத்தில் அளித்த பேட்டியில் சாவர்க்கர் பற்றி கூறியிருந்தார். அதில், “சாவர்க்கர் அனைவராலும் மதிக்கப்படுபவர். திருமணத்துக்குப் பிறகு தனது மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அந்த காலத்தில் பெண்கள் படிக்கமாட்டார்கள். பின்பு அவர் படிக்க செல்லும்போது, அந்த தெருவில் உள்ளவர்கள் அசிங்கப்படுத்துவார்கள்.

அப்போது சாவர்க்கர் அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு படிக்க வைக்கச் சென்றார். இது சரியா தவறா? அங்கிருந்து என்னுடைய கேள்விகள் எழுந்தன” என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலானது. ஜோதிபா புலே மற்றும் சாவித்திரி பாய் புலேவின் வரலாற்றை, சாவர்க்கரின் வரலாறு என சுதா கொங்கரா திரித்துப் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் சுதா கொங்கரா, வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் தவறுக்கு வருந்துகிறேன். எனது 17-வது வயதில் என் ஆசிரியர் சொன்னதை வைத்து நான் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக, அதன் உண்மைத் தன்மையை சோதித்திருக்க வேண்டும். அது என் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை, இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE