லவ் இன்சூரன்ஸ் கம்பெனியில் இணைய தலைமுறை காதல்

By KU BUREAU

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்துக்கு 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்று பெயரிடப்பட்டுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, சீமான், கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், சுனில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இன்றைய இளம் இணைய தலைமுறையினரின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படைப்பாக உருவாகும் இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பைப் பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE