முழு சம்பளமும் வாங்கிக்கொண்டு நடிக்க மறுக்கிறார்: நடிகர் ரெடின் கிங்ஸ்லி மீது புகார்

By காமதேனு

ஒப்பந்தமான படத்தில் நடிக்க மறுத்ததாக நடிகர் ரெடின் கிங்ஸ்லி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘டாக்டர்’. இப்படத்தின் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இதன்பிறகு, இவர் ‘கோலமாவு கோகிலா’, ’அண்ணாத்த’, ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்டப் படங்களில் நடித்தார்.

இதன் பிறகு வரிசையாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் புதிதாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படம் ’லெக்பீஸ்’. இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஒப்புக் கொண்ட ரெடின் தற்போது நடிக்க மறுத்து வருவதாக, அவர் மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரில், ‘’ 'லெக்பீஸ்’ படத்தில் 10 நாட்கள் நடிக்க ரெடினுக்கு முழு சம்பளமும் கொடுத்துவிட்ட நிலையில், அவர் 4 நாட்கள் மட்டுமே நடித்துவிட்டு, மீதி நாட்களில் நடிக்க மறுத்து வருகிறார். இதனால், எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால், அந்த நஷ்டத்தை அவர் திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவர் நடித்துக் கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து நடிகர் ரெடின் தரப்பு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்புத் தரப்பு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE