சென்னை: நடிகர் நெப்போலியன் மகனின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல் ஆகியிருக்கிறது.
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம்தான் சமீபகாலத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. 25 வயதாகும் தனுஷ் தசை குறைப்பாட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சமீபத்தில் திருநெல்வேலியைச் சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
தனுஷ் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் வீடியோ கால் மூலமாகவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. நெப்போலியன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் திருநெல்வேலிக்கு வர, தனுஷுடன் நெப்போலியன் உறவினர்கள் சிலர் அங்கு இருந்தனர்.
தனுஷ்- அக்ஷயா திருமணம் இந்த வருடம் நவம்பர் 7ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க இருக்கிறது. திருமண அழைப்பிதழ் அரசர் காலத்து அரசோலை போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
» 'ராயன்' படத்தின் முதல் நாள் வசூல் விவரம்!
» 'கங்குவா' படத்தில் சூர்யாவுடன் இணையும் கார்த்தி - உறுதி செய்த பாடலாசிரியர் விவேகா