சென்னை: இனிவரும் காலங்களில் நடிகர் விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017- 2019 முதல் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த விஷால், சங்க நிதியை முறைகேடாக செலவழித்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘விஷால் மீது எழுந்த புகாரை அடுத்து நியமிக்கப்பட்ட ஸ்பெஷல் ஆடிட்டர் கொடுத்த அறிக்கையில் சங்கநிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் ரூ. 12 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சங்கத்திற்கு திரும்ப தர வேண்டும் என்று விஷாலுக்கு பலமுறை வலியுறுத்தியும் அவரிடம் இதுவரை பதில் இல்லை.
அதனால், பொதுக்குழுவின் தீர்மானத்தின்படி இனிவரும் காலத்தில் விஷாலை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்து பணிகள் தொடங்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
» 'ராயன்’ விமர்சனம் - இயக்குநராக ஜொலித்தாரா தனுஷ்!?
» திருமண வதந்தி - விஜய் ஸ்டைலில் பதில் சொன்ன கீர்த்தி சுரேஷ்!