திருமண வதந்தி - விஜய் ஸ்டைலில் பதில் சொன்ன கீர்த்தி சுரேஷ்!

By KU BUREAU

சென்னை: திருமணம் பற்றிய வதந்திகளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய் ஸ்டைலில் மாஸாக பதில் கொடுத்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது நண்பரைத் திருமணம் செய்யப் போகிறார் என்ற வதந்தி சமீப காலமாக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருந்தது. இதுபற்றி அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், “பாராட்டுகளைப் போலவே விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக, என் தனிப்பட்ட விஷயங்களையும் என் வீட்டில் உள்ளவர்களையும் சம்பந்தப்படுத்தி பேசுவதை எல்லாம் நான் பெரிதுபடுத்த மாட்டேன்.

நடிகர் விஜய் சொன்னதுபோல, உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனால், வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகிவிடும். இதைத்தான், என்னுடைய திருமண வதந்திகளுக்கும் பதிலாக சொல்ல விரும்புகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE