4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ஷாருக்கானின் `பதான்’: பிரம்மாண்ட கட்அவுட் வைத்த ரசிகர்கள்

By காமதேனு

நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ படத்திற்கு பிரம்மாண்டமான கட்-அவுட்கள் வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படக்கூடிய நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 25-ல் வெளியாகிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகக்கூடிய ஷாருக்கானின் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தீபிகா படுகோன் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் படம் வெளியாகிறது என்பதால் அதைக் கொண்டாடும் விதமாக தமிழகத்தின் பல முக்கிய திரையரங்குகளில் ரசிகர்கள் பிரம்மாண்டமான கட்அவுட்கள் வைத்துள்ளனர். படத்திற்கான முன்பதிவுகள் ஆரம்பித்த வேகத்திலேயே கிட்டத்தட்ட இரண்டு லட்சம் டிக்கெட்கள் விற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ’பிரம்மாஸ்திரா’ படத்தின் முன்பதிவு சாதனையை முந்தியுள்ள ‘பதான்’ திரைப்படம் வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிக வசூலை பெறும் என நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE