BMW கார் வாங்கியதும் நடிகர் தங்கதுரை செய்த நெகிழ்ச்சி செயல்: குவியும் பாராட்டுக்கள்!

By KU BUREAU

BMW கார் வாங்கியதும் நடிகர் தங்கதுரை ஏழைக் குழந்தைகளை அந்தக் காரில் அழைத்து சென்று குஷிப்படுத்தியிருக்கிறார்.

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகர் தங்கதுரை. பழைய ஜோக்குகளை சொல்லுவதில் புகழ்பெற்றவரான இவர் திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்போது ‘குக் வித் கோமாளி’யில் கோமாளியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். BMW கார் வாங்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.

புதுகார் வாங்கியதும் அதில் முதல் ட்ரிப்பாக ஏழைக் குழந்தைகள் சிலரை ட்ரிப் அழைத்து சென்றிருக்கிறார். அவர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்து பள்ளி பை உள்ளிட்ட சில கல்வி பொருட்களையும் வாங்கிக் கொடுத்து மகிழ்வித்திருக்கிறார். பின்னர், கடற்கரைக்கும் அவர்களை அழைத்து சென்றிருக்கிறார். இந்த வீடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ‘இறைவனுக்கு நன்றி’ என நெகிழ்ந்திருக்கிறார் தங்கதுரை. இவரது செயலுக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE