‘கேம் சேஞ்சர்’ ரிலீஸ் எப்போது?

By KU BUREAU

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி ஜோடியாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’. இதில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம், நவீன் சந்திரா, சுனில், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர்.

வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இதில் இருந்து ‘ஜருகண்டி’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பைப்பெற்றது. இப்படம் தசராவின்போது வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE