மலையாளத்தில் சேரன்

By KU BUREAU

இயக்குநரும் நடிகருமான சேரன், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கன்னட நடிகர் சுதீப் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது. இந்நிலையில் சேரன் மலையாளப் படத்தில் நடிக்கிறார்.

ஷேன் நிகம், ஆன் சீத்தல் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மலையாளப் படம், ‘இஷ்க்’. அனுராஜ் மனோகர் இயக்கி இருந்தார். இவர் அடுத்து இயக்கும் படம், ‘நரிவேட்டா’. டோவினோ தாமஸ் நாயகன். இதில் சேரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுராஜ் வெஞ்சரமூடு, ஆர்யா சலீம், பிரியம்வதா கிருஷ்ணன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE