சூர்யா கற்றுக்கொடுத்த விஷயம்: பிறந்தநாளில் உருகிய தம்பி கார்த்தி!

By KU BUREAU

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் கார்த்தி பகிர்ந்திருக்கும் வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

நடிகர் சூர்யா இன்று தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அவர் நடித்திருக்கும் ‘கங்குவா’ படத்தில் இருந்து முதல் பாடல் சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷலாக இன்று மாலை வெளியாகிறது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அவருடைய அடுத்தப் படத்தில் இருந்தும் பிறந்தநாள் வாழ்த்து வீடியோ வெளியானது.

நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி தனத அண்ணன் சூர்யாவுடன் வெள்ளை வேஷ்டி சட்டையில் எடுத்த அழகான புகைப்படம் ஒன்றைத் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், ‘உங்களிடம் எதுவும் இல்லாத நிலையிலும், ஒரு விஷயத்தை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால் எதையும் நீங்கள் அடையலாம் என்பதை என் அண்ணன் தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அண்ணனுக்கும் அவருடைய அன்பான ரசிகர்களுக்கும் நன்றி. பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE