‘பராரி’ படத்துக்கு விருது

By KU BUREAU

ஹரிசங்கர், புதுமுகம் சங்கீதா கல்யாண் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘பராரி’ . ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். எழில் பெரியவேடி இயக்கியுள்ளார். ‘பராரி’ என்பது சொந்த இடங்களிலிருந்து, வெவ்வேறு இடங்களுக்குப் பிழைப்புக்காகச் செல்லும் மக்களைக் குறிக்கிறது. திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் எளிய மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும் சமகால பிரச்சினையையும் பேசும் இந்தப் படத்தை இயக்குநர் ராஜு முருகன் வழங்குகிறார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 57-வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றது. அங்கு சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE