விஜய்யின் ஸ்பெஷல் என்ட்ரி; அன்றே கணித்த சரத்குமார்; எமோஷனல் தமன்!

By ஆதிரா

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இரண்டு வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய் பங்கேற்கும் ஆடியோ லாஞ்ச் என்பதால், ரசிகர்களிடம் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது.

விழாவின் ஹைலைட்ஸ் தருணங்கள் குறித்து பார்ப்போமா?

*இயக்குநர் எஸ்.ஏ.சி., ஷோபா சந்திரசேகர், வம்சி, ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பாடலாசிரியர் விவேக், ஜானி மாஸ்டர், ஷங்கர் மகாதேவன், கணேஷ் வெங்கட்ராமன், சம்யுக்தா ஷான், லோகேஷ் கனகராஜ், தமன் என கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் பலரும் ஆஜர்.

*நாம் முன்பே சொன்னது போல, 'பிக்பாஸ்' ராஜூ மற்றும் விஜே ரம்யா இருவரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.

*நடிகர் விஜய் விழாவிற்கு உள்ளே வர ரசிகர்கள் மத்தியில் ஒரு ட்ராக் அமைத்து இருந்தார்கள். ரசிகர்கள் எல்லோருக்கும் வணக்கம் வைத்து கையசைத்து வர, பக்கவாட்டில் விஜய்யின் ஆரம்பகால படங்களில் இருந்து இப்போது வரைக்கும் அனைத்து பட போஸ்டர்களும் ஸ்க்ரோல் ஆனது. க்ரே கலர் ஷர்ட், வெள்ளை கலர் பேண்ட் காஸ்ட்யூமில் படு எளிமையாக வந்திருந்தார் விஜய்.

*விஜய் சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக விஜய்யின் ஹிட் பாடல்கள் மாஷ்ஷப் போடப்பட்டது. படத்தில் ஷோபி மாஸ்டரும் இரண்டு பாடல்களுக்கு நடனம் அமைத்து இருக்கிறார்.

*ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் அமைத்துள்ள ஜானி மாஸ்டர் பேசுகையில், 'ரஞ்சிதமே பாடல் என் ரசிகர்களுக்கு ஒரு கனவாக இருக்க வேண்டும். சிங்கிள் ஷாட்டில் 1நிமிஷம் 20 விநாடிகளுக்கு இந்தப் பாடலுக்கு நான் டான்ஸ் செய்ய வேண்டும். அதற்கான நேரம் இல்லைதான். ஆனால், அதை செய்ய வேண்டும்' என்று சொன்னார். அதன் பிறகு 'ரஞ்சிதமே' பாடலின் சிக்னேச்சர் ஸ்டெப்பை ஜானி மாஸ்டரும், ராஷ்மிகாவும் மேடையில் நடனமாடினார்கள்.

*திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், வசனகர்த்தா என படத்தில் பன்முகம் காட்டியிருக்கிறார் பாடலாசிரியர் விவேக்.

*விஜய்யுடன் முதல் ஷாட் முடிந்ததும் அவர் என்னிடம் வந்து ”செல்லம், இந்த கண்ண இவ்வளவு பக்கத்துல பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு” என்றார். மேலும், ”க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்யின் நடிப்பு கொடுத்த மேஜிக்கில் நான் அவருடைய ரசிகர் ஆகிவிட்டேன்” என்றார் படத்தின் வில்லனான பிரகாஷ்ராஜ்.

*சரத்குமார் பேசும்போது, ''சூரியவம்சம் பட விழா மேடையில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று சொன்னேன். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அவர் மிகச் சிறந்த மனிதர். 'வாரிசு' நிச்சயம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்கும்” என்றார்.

* இதுவரை இல்லாத அளவுக்கு விஜய்யின் 'வாரிசு' படம் பிரம்மாண்டமாக இருக்கும்” என தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்தார்.

*”ஒழுங்காக மியூசிக் போடவில்லை என்றால் ஸ்கூலில் எல்லாரும் கிண்டல் செய்வார்கள் அதனால் ஒழுங்காக மியூசிக் போட்டுவிடு’ என என் மகன் கொடுத்த ப்ரஷர்தான் அதிகம். இந்தியாவுக்கு ஆதார் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே, ஒரு இசையமைப்பாளருக்கு விஜய் படத்தில் மியூசிக் போடுவது முக்கியம். என் வாழ்க்கையில் இது ஒரு முழுமையான தருணம். நான் வாழ்க்கை முழுவதும் தளபதி ரசிகன். நான் கேட்டதும் ’தீ தளபதி’ பாடல் பாட உடனே சிம்பு சம்மதம் தெரிவித்தார். அனிருத்தும் பாடியிருக்கிறார். என்னுடைய அனைத்து நண்பர்களுடனும் இந்தப் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி” என தமன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE