நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு முடிவடைந்தது!

By KU BUREAU

நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்-த்ரிஷா நடிப்பில் தொடங்கப்பட்ட ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்த நிலையில், ஒருவழியாக படப்பிடிப்பை அஜர்பைஜானில் நிறைவு செய்திருக்கிறது படக்குழு.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததாக புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. படத்தின் முதல் இரண்டு பார்வை போஸ்டரில் அஜித் இருக்கும் ஆக்‌ஷன் ஸ்டில் மட்டுமே வெளியிடப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான தேர்ட் லுக் போஸ்டரில் அஜித்-த்ரிஷா இருக்கும் ரொமாண்டிக் போஸ்டர் வெளியானது. இப்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE