`பாசமுள்ள மனிதனப்பா, நீ மீசவச்ச குழந்தையப்பா'- ரஜினிக்கு வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து

By காமதேனு

நடிகர் ரஜினிகாந்த்துக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி சென்னை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார் லதா ரஜினிகாந்த். மேலும் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அவரது ரசிகர்கள் குவிந்தனர். ரஜினி வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் அங்கேயே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். மயிலாடுதுறையில் சாலையோரம் வசிக்கும் ஏழை எளியோருக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் போர்வை மற்றும் உணவுகள் வழங்கினர்.

பிறந்தநாளையொட்டி ரஜினிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"பாசமுள்ள மனிதனப்பா -

நீ மீசவச்ச குழந்தையப்பா

நன்றியுள்ள ஆளப்பா

நல்லதம்பி நீயப்பா

தாலாட்டி வளர்த்தது

தமிழ்நாட்டு மண்ணப்பா

தங்கமனம் வாழ்கவென்று

தமிழ்சொல்வேன் நானப்பா

என்று வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE