டாக்டர் படிப்பை முடித்த நடிகை மஞ்சு வாரியர் மகள்!

By KU BUREAU

சென்னை: நடிகை மஞ்சு வாரியரின் மகள் மீனாட்சி மருத்துவப்படிப்பை முடித்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மீனாட்சிக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ‘விடுதலை 2’ படத்தில் நடித்திருக்கிறார். இவர் மலையாள நடிகர் திலீப்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இந்த ஜோடி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தது.இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார்.

மஞ்சு வாரியர்- திலீப் பிரிந்ததும் இவர்களது மகள் மீனாட்சி திலீப்புடன் வசித்து வருகிறார். இவர் சென்னை, ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் தற்போது பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். இதன் பட்டமளிப்பு விழாவின்போது தனது தந்தை திலீப் குமாருடன் அவர் எடுத்தப் புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் மீனாட்சிக்கு தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE