’விடாமுயற்சி’ தேர்ட் லுக்: த்ரிஷாவுடன் ரொமான்ஸ் செய்யும் அஜித்!

By KU BUREAU

நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் மூன்றாம் பார்வை போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதன் பெரும்பகுதி அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதை ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில் அஜித் ஆக்‌ஷன் பிளாக் மேக்கிங் காட்சிகள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செகன்ட் லுக் ஆகியவை வெளியிடப்பட்டது.

தற்போது அஜித்- த்ரிஷா ரொமாண்டிக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதுவரை வெளியான ‘விடாமுயற்சி’ போஸ்டர்களில் சால்ட் & பெப்பர் லுக்கில் காணப்பட்ட நடிகர் அஜித் இதில் இளமையான தோற்றத்தில் காணப்படுகிறார். அஜித்தும், த்ரிஷாவும் கேண்டில் லைட் டின்னரில் மகிழ்ச்சியோடு இருக்கும் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

அஜித்- த்ரிஷா இருவரும் இதற்கு முன்பு ஜோடி சேர்ந்த ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்டப் படங்களில் கதைப்படி இருவரும் ஜோடி சேர மாட்டார்கள். இந்த ஜோடி கதைப்படி ‘விடாமுயற்சி’ படத்திலாவது ஒன்று சேர்வார்களா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE