”தமன்னா நடனம் ஆடினால் அந்தப் படம் ஹிட்” என முன்பு நடிகர் பார்த்திபன் பேசியது சர்ச்சையைக் கிளப்ப அதற்கு தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் ’டீன்ஸ்’ படம் கடந்த வாரம் வெளியானது. இதனை ஒட்டி, அவர் பட புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் அவர், ”ஒரு படம் நல்லா ஓடுறதுக்கு மிகப்பெரிய வெற்றிக் காரணமாக தமன்னாவின் நடனம் அமைந்திருக்கிறது” என்ற ரீதியில் பேசியிருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. சமீபத்தில் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ மற்றும் சுந்தர்.சி-யின் ‘அரண்மனை4’ படத்தில் தமன்னாவின் நடனம் வைரலானது. ’இதைக் குறிப்பிட்டுதான் பார்த்திபன் பேசியிருக்கிறார். ’ஜெயிலர்’, ‘அரண்மனை4’ தோல்விப் படங்கள் என்கிறாரா?’ என கேட்க ஆரம்பித்தனர்.
இதற்கு பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்து, ‘நண்பர்களே! ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும், இயக்குநர்களையும் மதிப்புடன் உயர்ந்தே பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
» நடிகர் விஜயின் தவெக நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு!
» ‘இந்தியன்2’ படத்துக்கு எதிர்மறை விமர்சனம்: பார்வையாளர்களை விமர்சித்த பாபி சிம்ஹா!