விஷ்ணு விஷாலின் ‘ஓர் மாம்பழ சீசனில்’

By KU BUREAU

நடிகர் விஷ்ணு விஷாலின் அடுத்த படத்துக்கு ‘ஓர் மாம்பழ சீசனில்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘பேச்சுலர்’ படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். விஷ்ணு விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE