சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

By KU BUREAU

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். சாய் பல்லவி, ராகுல் போஸ், புவன் அரோரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த, வீரமரணமடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையை கொண்டு இது உருவாகியுள்ளது. காஷ்மீரில் இந்திய ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படம். இதன் ரிலீஸ் தேதியை ராஜ்கமல் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு அக்.31-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE