குடும்பத்துடன் நடிகர் விஜயை சந்தித்த நடிகை ரம்பா!

By KU BUREAU

சென்னை: நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் நடிகர் விஜயை சந்தித்துப் பேசியுள்ளார்.

'நினைத்தேன் வந்தாய்’, ‘மின்சாரக் கண்ணா’ உள்ளிட்டப் பல ஹிட் படங்களில் நடிகர் விஜயுடன் ஜோடியாக நடித்தவர் ரம்பா. இப்போது குடும்பம், குழந்தைகள் என செட்டில் ஆன நடிகை ரம்பா நடன நிகழ்ச்சிகளில் நடுவர், விளம்பரம் என பிஸியாக வலம் வருகிறார்.

இவர் தற்போது நடிகர் விஜயை அவரது இல்லத்தில் தனது குடும்பத்துடன் சந்தித்துப் பேசியுள்ளார். ரம்பாவின் சுட்டி மகனை தூக்கி வைத்து கொஞ்சியுள்ளார் விஜய். இந்தப் புகைப்படங்களை ரம்பா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘பல வருடங்கள் கழித்து, உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. உங்களுடைய அரசியல் பயணத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் தற்போது 'GOAT' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தப் படத்திற்குத் தயாராகி வருகிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடமே இருக்கும் நிலையில், தனது கடைசிப்படத்தை முடித்துவிட்டு முழு வீச்சாக அரசியலிலும் குதிக்க உள்ளார் விஜய்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE