‘சர்தார்2’ படத்தில் இணைந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா!

By KU BUREAU

சென்னை: நடிகர் கார்த்தியின் ‘சர்தார்2’ படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி அப்பா-மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘சர்தார்’ திரைப்படம் கடந்த 2022ல் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், அப்போது படத்திற்கு சக்சஸ் மீட் வைத்து இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக இயக்குநர் மித்ரன் அறிவித்திருந்தார்.

இதற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமான செட்டில் தொடங்கியது. இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஸ்டைலிஷான லுக்கில் எஸ்.ஜே.சூர்யாவின் போஸ்டரையும் வெளியிட்டு அவரை வரவேற்றுள்ளது.

‘மாநாடு’, ‘மார்க் ஆண்டனி’, ‘இந்தியன்2’ எனத் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி வரக்கூடிய எஸ்.ஜே.சூர்யா, இந்தப் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா அல்லது வேறு கதாபாத்திரமா என்பதை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE