பெண் தயாரிப்பாளர் என்னை ஏமாற்றி விட்டார்: கமல் பட நடிகர் பரபரப்பு புகார்

By ரஜினி

சினிமாவில் பெரிய கதாபாத்திரம் தருவதாகக்கூறி பணமோசடி செய்த பெண் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையம் அலுவலகத்தில் துணை நடிகர் பரபரப்பு புகார் செய்துள்ளார்.

சென்னை மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்த துணை நடிகர் ராஜகுமார்.. இவர் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவான 'விக்ரம்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள 'மாமன்னன்' உள்பட பல படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

யோகிபாபுவுடன் ராஜகுமார்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் தயாரிப்பாளர் மீது ராஜகுமார் இன்று புகார் செய்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " தமிழ் திரைப்படம் மற்றும் டிவி தொடர்களில் சிறு வேடங்களில் நடித்து வருகிறேன். கடந்த ஓராண்டிற்கு முன்பு சாலிகிராமத்தைச் சேர்ந்த பெண் தயாரிப்பாளரான பத்மபிரியா என்பவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.

அவர் திரைப்படம் தயாரிக்க உள்ளதாகவும், அந்த படத்தில் பெரிய கதாபாத்திரம் தருவதாக என்னிடம் ஆசை வார்த்தை கூறினார். அவரது ஸ்டூடியோவில் என்னை தங்க வைத்து ஏமாற்றி சிறுக சிறுக 50 ஆயிரம் பெற்றதாக கொண்டார். மேலும் கார் ஆர்சி புத்தகத்தை வாங்கி தனியார் பைனான்ஸ் கம்பெனியில் அடமானம் வைத்து 2.11 லட்சம் பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்துள்ளார். இந்த காருக்கான கடன் தொகையைப் பத்மபிரியா திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியதால் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் எனது காரை எடுத்து சென்று விட்டனர். அந்த, காரில் என்னுடைய வீட்டு சாவி, மற்றும் ஏடிஎம் கார்டு, துணி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ளது, கார் திருப்ப கிடைத்தால் மட்டுமே என்னுடைய பொருட்கள் திரும்ப கிடைக்கும்" என்று கூறினார்.

மேலும் "இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது போலீஸார் என்னுடைய புகாரை வாங்காமல் அலைக்கழித்தனர். ஏற்கெனவே பத்ம்பிரியா மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பல மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறிய ராஜகுமார், இதனால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தேன். எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தைப் பெற்று தரவேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE