சென்னை: ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் வசூல் ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த மாதம் ‘கல்கி 2898 ஏடி’ படம் வெளியானது. மகாபாரதப் போர் முடிவடைந்த பின்பு தொடங்கும்படியாக இந்தப் படத்தின் கதையை அமைத்திருந்தார் நாக் அஸ்வின். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூலை வாரிக் குவித்துள்ளது. அதன்படி, உலக அளவில் இந்தத் திரைப்படம் ரூ.1000 கோடியை வசூல் செய்துள்ளதாகப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, நடிகர்கள் துல்கர் சல்மான், மிர்ணாள் தாக்கூர் உள்ளிட்டப் பல நட்சத்திரங்கள் கேமியோவில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிளைமாக்ஸில் குறைவான நேரமே இவரது கதாபாத்திரம் இடம்பெற்றிருந்தது. அடுத்த பாகத்தில் இவரது திரை நேரம் அதிகம் இருக்கும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இதுபற்றி நடிகர் அமிதாப்பச்சன், ‘அன்பின் வெளிப்பாடுதான் இந்த வசூல்! எங்கள் முழு மனதையும் இந்தப் படத்தில் கொடுத்தோம். அதற்கு நீங்கள் கொடுத்த அன்புதான் இது. என்றென்றைக்கும் நன்றி!’ எனத் தெரிவித்துள்ளார்.
» இயக்குநர், பாடலாசிரியர் ரவிஷங்கர் தற்கொலை - திரையுலகம் அதிர்ச்சி
» நடிகை ராஷ்மிகாவை செல்ஃபிக்காக சூழ்ந்த ரசிகர்கள்: திடீரென கையைப் பிடித்ததால் பரபரப்பு!