அயோத்தியில் வெளியிடப்படும் ‘ஆதிபுருஷ்' டீஸர்!

By காமதேனு

நடிகர் பிரபாஸ் நடித்திருக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா, அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் நடைபெறவிருக்கிறது.

'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரபாஸ், ‘ராதே ஷ்யாம்’ படத்தின் தோல்விக்குப் பிறகு ரொம்பவே எதிர்பார்ப்புடன் நடித்திருக்கும் படம் 'ஆதிபுருஷ்'. 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத்தின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியாகும் தேதியையும் இடத்தையும் அறிவித்து உற்சாகமடைய செய்திருக்கிறது படக்குழு. அக்டோபர் 2-ம் தேதி அன்று உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படவிருக்கிறது. ராமர் பிறந்த பூமியில் இந்நிகழ்ச்சி நிகழ்வு நடைபெறுவது ரசிகர்களின் எதிர்பர்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.

பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரபாஸ், கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

ஐமேக்ஸ் மற்றும் 3டி-யில் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி இப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE