அம்பானி வீட்டு கல்யாணத்தில் நயன்தாரா- விக்னேஷ்சிவன்: கலக்கல் ஃபோட்டோஸ்!

By KU BUREAU

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.

தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சண்ட் திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் மகள் செளந்தர்யா, மருமகன், பேரன் என குடும்பத்தினருடன் சென்று பங்கேற்றார். ஆனந்த் அம்பானியுடன் அவர் நடனமாடிய வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலானது.

ரஜினி மட்டுமல்லாது நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, நயன்தாரா- விக்னேஷ் சிவன், அட்லி- ப்ரியா என கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்களான இவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில், திருமண நிகழ்வில் பங்கேற்ற நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் ரொமாண்டிக்காக எடுத்தப் புகைப்படங்களைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமீபகாலமாக முக்கிய விழாக்களுக்கு புடவை அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நயன், அம்பானி வீட்டுத் திருமணத்திற்கும் சந்தன நிற புடவை அணிந்து சென்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE