’இந்தியன்2’ படத்தின் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?

By KU BUREAU

நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘இந்தியன்2’ திரைப்படம் நேற்று வெளியானது. படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் பாகத்தில் பாராட்டைப் பெற்ற நடிகர் கமலின் புரோதஸ்டிக் மேக்கப், இரண்டாம் பாகத்தில் மைனஸாக அமைந்துள்ளதாகவும், திரைக்கதையும் பலவீனமாக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் ‘இந்தியன்2’ வெளியாகி இருந்தது. படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் விவரங்களை வெளியிடும் sacnilk.com இணையதளத்தின் கூற்றுப்படி, அனைத்து மொழிகளிலும் சேர்த்து ’இந்தியன்2’ திரைப்படம் முதல் நாளில் ரூ.25.6 கோடி வசூல் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழியில் மட்டும் முதல் நாள் ரூ.16.5 கோடியும், இந்தியில் ரூ.1.2 கோடியும், தெலுங்கில் ரூ.7.9 கோடியும் வசூல் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE