லவ் இங்க் என்றால் என்ன?

By KU BUREAU

அஜித்குமாரின் ’வலிமை’, அதர்வா முரளியின் ’100’ மற்றும் ஓடிடி தொடர்களில் நடித்திருப்பவர், ராஜ் அய்யப்பா. சமீபத்தில் வெளியான ‘உப்பு புளி காரம்’ ஓடிடி தொடரில் இவரது கதாபாத்திரம் பிரபலமானது. இவர் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் இங்க்'. எம்ஆர் பிக்சர்ஸ் ஏ.மகேந்திரன் ஆதி கேசவன் வழங்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்குகிறார். டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் மேகராஜ் தாஸ் கூறும்போது, "இன்றைய காலகட்ட காதலை பேசும் படம் இது. தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களையோ அல்லது காதல் சின்னத்தையோ டாட்டூ போட்டுக் கொள்வதை ‘லவ் இங்க்’ என்கிறார்கள். இதனால், ஜோடிகளுக்கு இடையே காதல் கூடும் என்று நம்பப்படுகிறது. இதைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள படம் இது. ரோம் காம் ஆக்‌ஷன் படமான இந்தக்கதைக்கு ராஜ் அய்யப்பா பொருத்தமானவராக இருந்ததால் தேர்வு செய்தோம்.

யோகி பாபு, திலீபன், விடிவிகணேஷ், முனிஷ்காந்த், அர்ஷத், பட்டிமன்றம் ராஜா, வினோதினி, மாறன், சுபாஷினி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அர்ஜுனா ஏ. எஸ் . ஒளிப்பதிவு செய்கிறார். விஷ்ணு விஜய் இசை அமைக்கிறார்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE