நடிகர் தனுஷ் மகனும், எஸ்.வி.சேகர் பேத்தியும் பள்ளி விழாவில் ஒரே புகைப்படத்தில் இருக்கும் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினரின் மகன் யாத்ரா. பள்ளியின் விளையாட்டு அணி கேப்டனாக யாத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். நீண்ட காலமாகப் பிரிந்து இருக்கும் இருவரும் ஒரே நிகழ்வில் கலந்து கொண்ட படங்கள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ மற்றும் படங்களை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் தனுஷின் மகன் யாத்ராவுடன் தனது பேத்தி ஆர்னா இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். எஸ்.வி. சேகரின் மகன் அஸ்வின் 'வேகம்', 'நினைவில் நின்றவள்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அஸ்வினின் மகள் ஆர்னா ஜூனியர் விளையாட்டு அணியின் கேப்டனாகவும், தனுஷின் மகன் யாத்ரா சீனியர் அணியின் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.