மும்பை: பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் கரண் ஜோஹர். இவர் தான் ‘பாடி டிஸ்மார்பியா’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
கரண் ஜோஹர் தயாரிப்பில், நாகேஷ் பட் இயக்கத்தில் லக்ஷயா, ராகவ் ஜூயல் உள்ளிட்டப் பலர் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘கில்’. இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர் தனக்கு ஏற்பட்டிருக்கும் அரிய வகை நோய் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இதுபற்றி பேசிய அவர், “எனக்கு எட்டு வயதில் இருந்தே ‘பாடி டிஸ்மார்பியா’ என்ற நோய் இருக்கிறது. அதாவது, தன் தோற்றத்தைப் பற்றி எதிர்மறை சிந்தனை இருக்கும். இதற்காக, பல மருத்துவர்களை சந்தித்து நான் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். மனரீதியான பிரச்சினைகளையும் சந்தித்தேன். என் தோற்றத்தை வெளியில் காட்டக் கூடாது என்பதற்காக தளர்வான உடைகளை எல்லாம் அணிந்து கொள்வேன். என்னதான் நான் உடல்நீதியாக நன்றாக இருப்பதாக பலர் சொன்னாலும், மன ரீதியாக நான் போராடிக் கொண்டிருக்கிறேன்” என வருத்தத்துடன் இதைப் பகிர்ந்துள்ளார்.
» விஜய் திமுகவிடம் சரண்டர் ஆகிவிட்டார் என்றெல்லாம் கூறுகின்றனர்: ராதாரவி கருத்து
» சென்னை மெட்ரோ அப்டேட்: நாதமுனி - கொளத்தூர் வழித்தடத்தில் டிசம்பரில் சுரங்கப்பாதை பணிகள் தொடக்கம்