என் காயங்களை கொண்டாடுகிறேன்: நடிகை ஹினா கான் உருக்கம்

By KU BUREAU

மும்பை: தனது கேன்சர் நோய் பாதிப்புக்கான சிகிச்சை பற்றி நடிகை ஹினா கான் பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஹினா கான் தனக்கு மூன்றாவது நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பதாகச் சொல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த கேன்சர் பாதிப்பிற்கு சிகிச்சை எடுக்கும்போது முடி உதிர்வு ஏற்படும் என்பதை அறிந்து முன் கூட்டிய தன் முடியை வெட்டிக் கொண்ட ஹினா கான், தான் உறுதியுடன் இருந்து கேன்சரை போராடி வெல்வேன் எனக் கூறியிருந்தார்.

இப்போது சிகிச்சையைத் தொடங்கியுள்ள அவர் கேன்சர் சிகிச்சையால் தனக்கு நேர்ந்துள்ள காயங்களை புன்னகையுடன் எதிர்கொண்டிருக்கும் புகைப்படங்களாகப் பகிர்ந்துள்ளார்.

அதில் கேப்ஷனாக, ‘என்னுடைய இந்தப் புகைப்படத்தில் என்ன பார்க்கிறீர்கள்? என் உடலில் உள்ள காயங்களையா அல்லது என் கண்களில் மிளிரும் நம்பிக்கையையா? இந்த காயங்கள் என்னுடையது. நான் அதை விரும்புகிறேன். ஏனெனில், நான் குணமடைய வேண்டும் என்று விரும்புவதற்கான முதல்படி இதுதான். என் ஆன்மாவின் நம்பிக்கைதான் என் கண்களில் எதிரொலிக்கிறது. இருண்ட சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சத்தைப் பார்க்கிறேன். உங்களுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்’ எனக் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE