விஜய் திமுகவிடம் சரண்டர் ஆகிவிட்டார் என்றெல்லாம் கூறுகின்றனர்: ராதாரவி கருத்து

By KU BUREAU

சென்னை: நடிகர் விஜயின் அரசியல் வருகை பற்றி நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.

நவீன்குமார் இயக்கத்தில் நடிகர் ராதாரவி, வனிதா விஜயகுமார் நடித்துள்ள திரைப்படம் ‘கடைசி தோட்டா’. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். ராதாரவி பேசுகையில், “சினிமாவின் ஆரம்ப காலத்தில் எனக்கு ஆயிரம் ரூபாய் தான் சம்பளம். ஆனால், அதில் இருந்து படிப்படியாக உயர்ந்து இப்போது நான் வாங்கும் சம்பளம் எனக்கே ஆச்சரியமான ஒன்றுதான். சினிமாவுக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. அரசியல், சினிமா இரண்டிலும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அதேசமயம் கெட்ட பெயரும் வாங்கி இருக்கிறேன்” என்றார்.

விஜயின் அரசியல் பிரேவசம் மற்றும் கல்வி விருது விழா பற்றிய கேள்விக்கு, “முதல் நிகழ்வில் விஜய் போதைப்பொருள் ஒழிப்பு பற்றி பேசியபோது, திமுகவினர் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். இப்போது இரண்டாவது நிகழ்வில், அவர் நீட் விலக்கு பற்றி பேசியதும் திமுகவினர் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். விஜய் திமுகவிடம் சரண்டர் ஆகிவிட்டார் என்றெல்லாம் கூறுகின்றனர். அரசியலுக்கு ஒருவர் வந்துவிட்டால் இப்படித்தான் மாற்றி மாற்றி பேசுவார்கள். இதையெல்லாம் தாண்டி வர விஜய் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE